தமிழ்நாடு

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார்..இந்தியாவின் சார்பில் அமைச்சர் ஜெய்சங்கர் செப்.26 ல் பங்கேற்பார்

வரும் 18 ஆம் தேதி நியூயார்க்கில் துவங்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்த கூட்டத்தில் வரும் 26 ஆம் தேதி பங்கேற்பார். மோடி தவிர, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகிய தலைவர்களும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஐநா பொதுச்சபை கூட்டத்தில், உக்ரைன் போர், தெற்குல நாடுகளின் பிரச்சனைகள் உள்ளிட்டவை குறித்து விவாதம் நடக்கும் என கூறப்படுகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்த ஆண்டு ஐநா பொதுச்சபை கூட்டத்தில் நேரடியாக கலந்து கொள்கிறார். ரஷ்யாவின் சார்பில் வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பங்கேற்கும் நிலையில், இந்த இருவரும் நேரடியாக சந்திக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

00 Comments

Leave a comment