தருமபுரி மாவட்டம் காரியமங்கலத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பலர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காரியமங்கலத்தில் உள்ள இடத்தில் , கடந்த 1987 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட 118 பேருக்கு வீடுகள் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்வதாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பகுதியில் கூடாரம் அமைத்து தற்போது ஆக்கிரமித்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் தங்கள் குழந்தைகளுக்கு அங்கன்வாடி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து காரியமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
00 Comments
Leave a comment