இந்தியா

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 4-வது முறையாக வெற்றிகரமாக விரிவுபடுத்தப்பட்டது |

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 4வது முறையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ அனுப்பிய இந்த விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வரும் வேளையில், இன்று அதிகாலை, 4 வது முறையாக வெற்றிகரமாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை பெங்களூரு, மொரிசீயஸ், போர்ட் பிளேயர் ஆகிய இடங்களில் உள்ள இஸ்ரோவின் தரைக்கட்டுப்பாட்டு மையங்கள் கண்காணித்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

00 Comments

Leave a comment