தமிழ்நாடு

சூப்பர்..பம்பர்..குலுக்கல்.. இனி GST பில்களுக்கு அசத்தல் பரிசுகள் | gst bills

நாம் வாங்கும் பொருட்கள் அல்லது பெறும் சேவைக்கு வழங்கப்படும் GST பில்களுக்கு பரிசளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. எனது பில், எனது அதிகாரம் என்ற பொருள்படும், மேரா பில், மேரா அதிகார் என்ற இந்த திட்டத்தின்படி, நாம் வாங்கும் GST பில்களை செல்போன் வாயிலாக பதிவிட வேண்டும். அதில் இருந்து மாதம் 500 முறை குலுக்கல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பரிசு வழங்குவதே இந்த திட்டமாகும்.இதில் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை பரிசு கிடைக்கும் என கூறப்படுகிறது,. எனவே இனிமேல் பணம் செலுத்தி வாங்கும் பொருள் அல்லது சேவைகளுக்கு, மக்கள், GST பில்லை கேட்டு வாங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

00 Comments

Leave a comment