தமிழ்நாடு

அதிரடியாக குறைந்த வணிக சிலிண்டர் விலை

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 92 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது.

சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. அதில் மாதத்தின் முதல் நாள் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து அறிவிக்கின்றனர். அந்த வகையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 92 ரூபாய் 50 காசுகள் குறைந்து 1852 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த மாதம் 8 ரூபாய் உயர்ந்து 1945 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை இந்த மாதம் 92 ரூபாய் 50 காசுகள் குறைந்து 1842 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பல மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் ஏற்றம் இறக்கத்துடனே இருந்து வரும் நிலையில், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் உள்ளன. அதன்படி 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 1852 ரூபாய் 50 காசுகளுக்கும், 14.2 கிலோ கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 1118 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன

00 Comments

Leave a comment