தமிழ்நாடு

ரூ.200 கோடி ஹவாலா பணத்தை கைமாற்ற முயற்சி

ரூ.200 கோடி ஹவாலா பணத்தை கைமாற்ற முயற்சி

தேர்தல் செலவுக்காக துபாயிலிருந்து 200 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை தமிழகத்திற்கு கொண்டு வர முயன்றவரை பிடித்து, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது செல்போன், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். மலேசியாவிலிருந்து சென்னை வந்த வினோத்குமார் ஜோசப் என்பவர், துபாய், மலேசியாவில் செயல்படும் பிரபல ஹவாலா ஏஜெண்ட் என்பது தெரிய வந்துள்ளது. அவர் துபாயில் உள்ள செல்வம் என்பவரிடமிருந்து 200 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கைமாற்றி, தமிழகத்தில் உள்ள பிரபல அரசியல் கட்சிக்காக பணியாற்றி வரும் அப்பு என்கிற விநாயகவேல் என்பவரிடம் ஒப்படைக்க முயன்றதாகவும், மவுனிகா விரோலா என்பவரின் வைர நிறுவனமும் ஹவாலா பரிமாற்றத்தில் ஈடுபட திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

00 Comments

Leave a comment