உலகம்

பட்டியலினத்தவராக அறிவிக்க கோரி குர்மி இனத்தவர் போராட்டம் மூன்று மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்த அழைப்பு| Kurmi people struggle


தாங்கள் அறிவித்த கால வரையற்ற ரயில் மறியல் போராட்டத்தை கைவிடுவதாக குர்மி இனத்தவர் அறிவித்துள்ளதை அடுத்து, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் ரயில் போக்குவரத்து இயல்பாக நடக்கும் என தென்கிழக்கு ரயில்வேயும், கிழக்கு கடற்கரை ரயில்வேயும் தெரிவித்துள்ளன. தங்களை பட்டியலினத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும், குர்மாலி மொழியை அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த மூன்று மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டத்திற்கு குர்மி சமாஜம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், இந்த அறிவிப்பை தொடர்ந்து, தங்களது மூத்த தலைவர்கள் காவல்துறையால் சித்திரவதை செய்யப்படுவதாகவும், எனவே ரயில் மறியல் போராட்டத்தை கைவிட்டு விட்டு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிப்பதாகவும் குர்மி சமாஜம் தெரிவித்துள்ளது. 
 

00 Comments

Leave a comment