1
தமிழ்நாடு
2025-26ம் கல்வியாண்டிற்கு தேவையான 99% புத்தகங்கள் தயார்.. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே மாணவர்களுக்கு விநியோகம்
தமிழகத்தில் 2025-26ம் கல்வியாண்டிற்கு தேவையான 99 சதவீத புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளதாகவும், பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 4 கோடியே 19 லட்சம் புத்தகங்கள் ஆர்டர் தரப்பட்டு அச்சிடப்பட்டுள்ளதாகவும், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முன்பே புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.