40
தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும்,தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று நீலகிரி, தென்காசி, தேனி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை 22ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
