வீட்டு மின் கட்டணத்தில் எந்த உயர்வும் இல்லை.. மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்

தமிழகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
21
21
Published on: 

தமிழகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில் கடந்த சில நாட்களாக மின் கட்டணம் குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியானதாகவும், தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்த எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை என கூறினார்.

அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

newstamil.tv