Also Watch
Read this
By: Manigandan Raja

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை :
சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பல்சர் குமார், டாவு மணி ஆகியோர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் போலீசார் வழக்கு விசாரணைக்காக கூடுதல் சார்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது அங்கிருந்த ஒரு வாலிபர் கைதிகளுக்கு கஞ்சா பொட்டலம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த போலீசார் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அதில், அவர் தாதகாப்பட்டி ஆறுமுகம் தெருவை சேர்ந்த சண்முகம் என்ற சம்பு (37) என்பது தெரிந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 200கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணையில் சண்முகம் மீது 4 வழப்பறி வழக்கு இருப்பது
தெரிந்தது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved