news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

tv

Read this

கோயிலில் பொறுப்பு வகிப்பது தொடர்பாக நிகழ்ந்த கொ*ல

மதுரை

81

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mdu 2(9)

மேலூர் அருகே கோவிலில் பொறுப்பு வகிப்பது தொடர்பாக நிகழ்ந்த கொ*ல சம்பவத்தில் உறவினர் உட்பட 7 பேர் கைது செய்யப்ப்பட்டனர். திருவாதவூரில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் பொறுப்பு வகிப்பது தொடர்பாக மணிகண்டன் தரப்பிற்கும், அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினரான மணி தரப்பினருக்கும் முன்பகை நிலவி வந்த நிலையில், கடந்த 09ஆம் தேதி இரவு , இதுதொடர்பாக மீண்டும் இரு தரப்பிற்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு மணி தரப்பினர் மணிகண்டனை சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தார்.

தட்டிக்கேட்ட மணிகண்டன் தம்பி அடித்து கொ*ல
இந்நிலையில், மணிகண்டன் தாக்கப்பட்டது தொடர்பாக, அவரது தம்பி அர்ஜுனன், மணி தரப்பினரிடம் தட்டிக் கேட்டபோது அவரையும் கட்டை மற்றும் பாட்டிலால் தலை மற்றும் முகத்தில் கடுமையாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அர்ஜுனன் உயிரிழந்தார். மேலும் இந்த மோதலை தடுக்க வந்த மணிகண்டனின் உறவினர் அருணாச்சலத்தையும் தாக்கி உள்ளனர்.

உறவினர்கள் உள்ளிட்ட 7பேர் கைது
இந்நிலையில், இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் மணி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், திருவாதவூரைச் சேர்ந்த மணி(59), விஜயகுமார் (25), அய்யனார் (24), கண்ணதாசன் (24), சந்தோஷ் (22), அஷ்வின்சேகர் (27), சுரேஷ் (24) ஆகிய 7 பேரை கைது செய்து, மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக சிலரை தேடி வருகின்றனர். உறவினர்கள் இடையே கோயிலில் பொறுப்பு வகிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டு, கொலை நிகழ்ந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Related Link
இளம்பெண்ணிடம் அத்துமீறிய டெய்லர்

இளம்பெண்ணிடம் அத்துமீறிய டெய்லர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வைபவ் சூர்யவன்ஷி குறித்து யுவ்ராஜ் சிங் கருத்து

0
10 hrs 4 mins agoshare
Sports 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved