news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

கானா பாடலை ஒலிக்கவிட்டு சம்பவம், வில்லனான சிறுவன்

ஆயுதங்களுடன் செல்ஃபி, அதிர்ச்சி

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கோவை அருகே ஒரு இளைஞரை, சிறுவன் உட்பட இருவர் சுத்தியலால் தலையில் அடித்தும், அரிவாளால் வெட்டியும், கழுத்தை கத்தியால் அறுத்தும் கொ* செய்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. வன்முறையை தூண்டும் வகையிலான கானா பாடலை ஒலிக்கவிட்டும், வாயில் அரிவாள் மற்றும் கத்தியை வைத்து செல்ஃபி எடுத்தும் கொ*வெறி செயலில் ஈடுபட்ட இருவரும் தப்பி ஓடிய நிலையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

அறிவுரை வழங்கியதால்...
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள சொலவம்பாளையம் உதய்நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் அஸ்வினும், சிக்கலாம்பாளையம் பகுதியை சேர்ந்த விஷ்ணுவும் நண்பர்கள். இதில் விஷ்ணுவுக்கு பெற்றோர் இல்லாததால் பாட்டி பராமரிப்பில் தான் வளர்ந்து வருகிறார். அதனால், அவரது வீட்டில் வைத்து விஷ்ணுவும், அவரது நண்பர்களும் அடிக்கடி மது அருந்துவது வழக்கம். இதில், 17 வயது சிறுவனும் அடிக்கடி சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த அந்த சிறுவனை மீண்டும் தேர்வெழுதுமாறும், தங்களுடன் சேர்ந்து குடித்து வாழ்க்கையை வீணாக்க வேண்டாம் எனவும் அஸ்வின் பலமுறை அட்வைஸ் செய்ததாக கூறப்படுகிறது. அது, சிறுவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

கொடூர சம்பவம்
இந்நிலையில், வழக்கம்போல விஷ்ணு வீட்டுக்கு வந்த அஸ்வின் மது அருந்திவிட்டு இரவில் அங்கேயே தூங்கிவிட்டார். அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய சிறுவன், இளைஞர் மாதேஷை நள்ளிரவு 2 மணிக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். விஷ்ணு பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருந்த நேரத்தை பயன்படுத்திய சிறுவனும், மாதேசும் அஸ்வின் தலையில் சுத்தியலால் அடித்தும், கழுத்தை கத்தியால் அறுத்தும், அரிவாளால் கொத்தியும் கொ* செய்துள்ளனர்.

செல்பி எடுத்த கொடூரம்
வன்முறையை தூண்டும் வகையிலான கானா பாடலை ஒலிக்கவிட்டுதான் இந்த சம்பவத்தையே இருவரும் அரங்கேற்றி உள்ளனர். கடைசியாக ஒரே ஒரு ஆசை எனக்கூறியபடியே, ரத்தவெள்ளத்தில் உயிரிழந்த கிடந்த அஸ்வினை சிறுவன் சுத்தியலால் மீண்டும் மீண்டும் ஓங்கி அடிக்க, தினேஷை அடித்தது நினைவிருக்கிறதா?

தினேஷ், மாதேஷ் இருவரிடமும் வைத்துக்கொண்டால் இப்படிதான் என மாதேஸ், வில்லன்போன்று பேசி அஸ்வின் சடலத்தை ஆயுதத்தால் தாக்கி உள்ளான். உனது சீன் இதோடு முடிந்தது... தினேஷை அடித்தாயே, தற்போது கண்ணை திறந்து பாருடா பார்க்கலாம் எனக்கூறி ஆத்திரம் தீர சுத்தியலால் அடித்து அதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்த இருவரும், ரத்தத்தால் நனைந்திருந்த கத்தி மற்றும் அரிவாளை வாயில் வைத்து செல்ஃபியும் எடுத்துள்ளனர்.

காவல்துறை விசாரணை
இரவோடு இரவாக இருவரும் அந்த வீடியோவை தங்களது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அடுத்து அங்கு வந்த கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார், அஸ்வின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சிறுவனையும், மாதேஷையும் தேடி வருகின்றனர். அதேபோல், வீடியோவில் குறிப்பிடப்படும் தினேஷ் யார்? தினேஷை அஸ்வின் எப்போது அடித்தார்? எதற்காக அடித்தார்? இந்த கொ*யில் அந்த தினேசுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காவல் வாகனத்தை மறித்த 'வைரல் பெண்' மாடல் அழகி ரியா கண்ணீர் மல்க புகார்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved