news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

சட்டப்பேரவையில் விஜய் VS உதய்

"மக்களுக்காக எதையும் தாங்குவேன்"

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மேகதாது மற்றும் காவிரி விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கேள்விகளும், அதற்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த அதிரடி பதிலடிகளும் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளன. சட்டப்பேரவையில் இருவருக்கும் இடையே நடந்த காரசார விவாதத்தை இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

திருத்திய நிதிநிலை அறிக்கை
சட்டப்பேரவையில்,2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட கையோடு, மேகதாது மற்றும் காவிரி விவகாரம் அவையை ஹாட் சீட்டாக மாற்றிவிட்டது. பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கையில் எடுத்தார். எடுத்த எடுப்பிலேயே ஆளுங்கட்சியான தவெகவை அட்டாக் செய்யும் மோடில் இறங்கிய உதயநிதி, பாயிண்ட் பை பாயிண்ட்டாக கேள்விகளை அடுக்கினார்.

சரமாரி கேள்விகள்...
அவையில்,குரலை உயர்த்திய உதயநிதி, தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகுதான் கர்நாடக அரசு மேகதாது விவகாரத்தில் ஸ்பீட் காட்டுவதாகவும், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 5 முன்னாள் முதல்வர்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து உட்கார வைத்து பேசுவதாகவும் கூறினார்.

ஆனால், தவெக அரசோ எதையாவது பிளான் பண்ணிவிட்டு, அதை மீடியாவுக்கு கசியவிட்டு, அப்புறம் எதிர்ப்பு வந்ததும் அப்படியே யு டர்ன் அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது என்றார். அதுமட்டுமா, சொன்ன வேளாண் கடன் தள்ளுபடியிலும் பாதிதான் ஓகே ஆகியிருக்கிறது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

பதில் அளித்த முதல்வர் விஜய்
இப்படி உதயநிதி பாயிண்ட்டுகளை அடுக்கிக்கொண்டிருக்க, குறுக்கிட்ட பேரவைத் தலைவர், அரசியல் ANGLEஐ குறைத்துக்கொண்டு சுருக்கமாக பேசி அமருங்கள் என வார்னிங் பெல் அடித்தார். உதயநிதி பேசி முடித்ததும் முதலமைச்சர் விஜய் பதிலளிக்க எழுந்தபோது, எதிர்த்தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அவை விதிப்படிதான் நடக்கிறது என சபாநாயகர் க்ரீன் சிக்னல் கொடுக்க, தமக்கே உரித்தான பாணியில் திமுகவின் குற்றச்சாட்டுகளை துவம்சம் செய்ய தொடங்கினார் முதலமைச்சர் விஜய்.

அரசியல் வேண்டாம்...
காவிரி நமது லைஃப் லைன், அதை வைத்து CHEAP பாலிடிக்ஸ் பண்ணும் எண்ணம் தங்களுக்கு எள்ளளவும் இல்லை என்ற முதலமைச்சர் விஜய், மேகதாதுவில் கர்நாடகா ஒரு செங்கல்லைக்கூட வைக்க கூடாது என்பதில் தாங்கள் ரொம்பவே CLEAR ஆக இருக்கிறோம் என்றார்.

பிரதமருக்கு இதற்கான ஸ்ட்ராங் லெட்டர் போய் விட்டதாக ஆணித்தரமாக பேசிய விஜய், தொடர்ந்து 1969ஆம் ஆண்டு சம்பவத்தை கிளறினார். 1969ல் கர்நாடகா அணை கட்டும்போது இங்கே நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார்? அப்போ ஏன் தடுத்து நிறுத்தல? என்றெல்லாம் பழைய ஃபைல்களை தோண்டி பார்த்து அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை என பதிலடி கொடுத்தார்.

கர்நாடகா பயணம் ஏன்?
தொடர்ந்து பெங்களூரு பயணம் குறித்து பேசியவர், பக்கத்து மாநிலத்தோடு பேசி பார்த்தால் என்ன என்ற பாசிட்டிவ் எண்ணத்தில்தான் பெங்களூரு செல்ல யோசித்ததாகவும், அங்கே போனால் உங்களுக்கு அவமானம் நடக்கும் என்று சிலர் உசுப்பேற்றியதாக கூறிய முதலமைச்சர், ’என் தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க இந்த விஜய் தயார்,’ என உணர்ச்சிப்பூர்வமாக அதிரடி காட்டினார்.

பதிலடி கொடுத்து முதல்வர்
இறுதியாக, எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் விஜய், குறுவை சாகுபடி நிவாரணம் ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டதை சுட்டிக்காட்டினார்.

நாங்கள்தான் ஆல் இன் ஆல் அரசியல்வாதி என்று ரீல் சுற்றும் சிலருக்கு இது தெரியாமல் போனது வேடிக்கை தான் என்ற விஜய், முன்ன பின்ன பேப்பரைப் புரட்டிப் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்கிறது என்று அப்டேட்டாக இருந்திருக்கலாம் என விளாசினார்.

நேருக்கு நேர் மோதல்
முதலமைச்சர் விஜயின் இந்த அதிரடி பதிலடியால் சட்டப்பேரவையே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது. காவிரி உரிமையை மீட்டெடுக்க சட்டப்பூர்வமாக எந்த எல்லைக்கும் செல்வோம் என, முதல்வர் உறுதியளிக்க, காரசார விவாதத்திற்கு பிறகு பேரவை அமைதிக்கு திரும்பியது. அரசியல் மேடைகளை தாண்டி, இப்போது சட்டமன்றத்திலும் விஜய் - உதயநிதி இடையேயான இந்த நேருக்கு நேர் மோதல், கோட்டை வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

Related Link
விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பூஜ்ய கட்டண விதிக்கு முற்றுப்புள்ளியா? இனி UPIல் பணம் அனுப்ப கட்டணமா?

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved