Also Watch
Read this
By: Manigandan Raja

கியாரா அத்வானியை இப்படியா காட்டுவது?
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்சிக் திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகிருந்துச்சு. இந்த நிலையில் இந்த ட்ரைலர் குறித்து, கன்னட நடிகை ரிஷிகா சிங் கடும் கண்டனம் தெரிவிச்சிருக்காங்க. அவங்க வெளியிட்ட அந்த வீடியோ பதிவில், "கன்னட சினிமா உலகளவில் வளர வேண்டும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், 'டாக்சிக்' திரைப்படத்தின் டிரைலரில் பெண்களை சித்தரித்துள்ள விதம் மிகவும் வருத்தமளிக்கிறது.
படத்தில் 5 முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். அவர்களில் யாராவது கண்ணியமாகவோ அல்லது அழகாகவோ காட்டியுள்ளார்களா? பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை அழைத்து வந்து இப்படித்தான் காட்டுவதா?" என கேட்டுள்ளார்.
மேலும் படத்தின் கதாநாயகன் யாஷ் குறித்து, "ஒரு குடும்ப தலைவனாகவும், தந்தையாகவும் இருக்கும் யாஷ், பெண்களை மதிக்கும் விதத்தில் கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றால், உங்களை கர்நாடகாவை விட்டு வெளியேற்ற செய்வோம்" என எச்சரித்தவாறு வீடியோ மூலம் தனது கண்டனத்தை வெளிப்படுத்திருக்காங்க.
வெளியானது 'அவெஞ்சர்ஸ் - டூம்ஸ்டே' படத்தின் சிறப்பு வீடியோ
மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் படங்களின் புதிய பாகமான 'அவெஞ்சர்ஸ் - டூம்ஸ்டே' திரைப்படத்தின் சிறப்பு வீடியோ தற்போது வெளியாகிருக்கு. இந்த படம், அவெஞ்சர்ஸ்-இன்ஃபினிட்டி வார் மற்றும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஆகிய படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் (Russo Brothers) இயக்கத்தில் உருவாகுது.

இந்தப் படத்தில், கேப்டன் அமெரிக்காவாக நடிகர் கிறிஸ் எவான்ஸ் நடிச்சிருக்காரு. அதே மாதிரி, தோர் கதாபாத்திரத்தில் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வோர்த் நடிச்சிருக்காங்க. இந்த படம் வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாக இருக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved