Also Watch
Read this
By: Fyrose Banu

திருக்கழுக்குன்றம் அருகே 20 வருட காலமாக மின் இணைப்பு இல்லாமல் அவதிப்பட்ட மக்களுக்கு புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மனு கொடுத்த 40 நாட்களில் லஞ்சம் பெறாமல் மின் இணைப்பு பெற்று தந்து சாதனை படைத்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தவெக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்குப்பி ஊராட்சியில் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வரும் மக்களுக்கு மின் இணைப்பு வழங்கும் விழா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக திருப்போரூர் எம்எல்ஏ விஜயராஜ் மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே சிறப்புரையாற்றி முதற்கட்டமாக 90 பயனாளிகளுக்கு மின் இணைப்பினை வழங்கி அதற்கான அரசாணையை பயனாளிகளிடம் வழங்கினர்.

100 நாட்களில் தவெக செய்த சாதனை குறித்து திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவிடம் கேட்டபோது, எம் எல் ஏ விஜயராஜ் தேர்தல் முடிந்து பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை தன்னிடம் முன் வைத்தார்கள் என்றும் அதில் முக்கியமானதாக திருக்கழுக்குன்றம் அடுத்த நெய்குப்பி கிராமத்தில் 20 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து வரும் தங்களுக்கு மின் இணைப்பு கோரி மனுக்கள் அளித்தார்கள் அதனை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசி அதற்கான வழிமுறையை பின்பற்றி உங்கள் தேவையை பூர்த்தி செய்வேன் என்று உறுதியளித்ததாகவும் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உறுதுணையோடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோரின் வழிகாட்டுதல்படி அனைத்து பணிகளும் முடிவுற்று இன்றைய தினம் முதற்கட்டமாக 90 பயனாளிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்ந்து மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடரும் என்றார்,

தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை குறித்து நெய்குப்பி கிராம மக்களிடம் கேட்டபோது, கடந்த 20 மற்றும் 15 வருடங்களாக இப்பொழுதில் குடியிருந்து வரும் நாங்கள் மின் இணைப்பு கோரி கடந்த கால ஆட்சியாளர்களிடமும் அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தப் பயனும் இல்லாத நிலையில் தற்போது புதியதாக ஆட்சி அமைத்திருக்கும் தவெக முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பலமுறை முயற்சித்த நிலையில் அதனை தாங்கள் வீடியோவாக பதிவு செய்து அனுப்பியிருந்தnar.
அதை பார்த்த சட்டமன்ற உறுப்பினர் எங்கள் பகுதிக்கு இரவு 11 மணிக்கு வருகை தந்து மின் இணைப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்து பின்னர் ஒரு மாதத்திற்கு உள்ளாகவே இந்த மின் இணைப்பை தங்களுக்கு வழங்கி இருப்பதாகவும் இருளில் இருந்த எங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். அதிமுக திமுக என இரண்டு கட்சிகள் மாற்றி மாற்றி ஆட்சி செய்த போதிலும் லஞ்சம் பெற்றுக் கொண்டும் வழங்கப்படாத மின்சாரம் இந்த ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெறாமல் தவெக அரசு ஆட்சி அமைத்த 100 நாட்களில் மின் இணைப்பு பெற்று தந்தது மிகப்பெரிய சாதனை என பகுதி மக்கள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved