news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

அமெரிக்கா, போலந்து வீராங்கனைகள் அசத்தல்

எம்மா நவரோவா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சின்சினாட்டி

அமெரிக்க சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்கா மற்றும் போலந்து வீராங்கனைகள் 4-வது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை எம்மா நவரோவா ஆகியோர் மோதினார்.

இதில் சிறப்பாக விளையாடிய ஜெசிகா பெகுலா 7-க்கு 5, 6-க்கு 2 என்கிற செட் கணக்கில் வென்றார். மற்றொரு போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 4-க்கு 6, 6-க்கு 1, 6-க்கு 1 என்கிற செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியை வீழ்த்தினார்.

இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தல் வெற்றி

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் அசத்தல் வெற்றிபெற்றார். டெல்லி இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ருமேனியா வீரர் காலின்ஸ் பிலிமன்னை வீழ்த்தினார்.

அதேபோல, மகளிர் இரட்டையர் பிரிவில் த்ரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி, அமெரிக்காவின் லாரன் லேம் - அலிசன் லீ ஜோடியை நேர் செட் கணக்கில் வீழ்த்தி 16-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய இளம் வீராங்கனை உன்னதி ஹுடா, மியான்மரின் தெட் ஹதார் துசாரை வீழ்த்தினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 19082026

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved