Also Watch
Read this
By: Fyrose Banu

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வீரசோழபுரம் ஊராட்சியில் விலை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து வெள்ளகோவில், காங்கேயம் பகுதி விவசாயிகள் 4-வது நாளாக தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதையடுத்து அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் கோவை இருகூரிலிருந்து கர்நாடகா மாநிலம் தேவனகொண்டி வரை சுமார் 340 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிலத்தடி குழாய்கள் மூலம் எண்ணெய் கொண்டு செல்லும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதில் இருகூரிலிருந்து முத்தூர் வரை 70 கிலோமீட்டர் தூரம் வேளாண் நிலங்கள் வழியாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்னை, வாழை போன்ற மரங்களும் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களும் அளிக்கப்படுகின்றது. பயன்பாட்டு உரிமை விதிகளின்படி குழாய் செல்லும் விளைநிலங்களில் கட்டிடங்கள் கட்டவோ, ஆழ்துளை கிணறு அமைக்கவோ முடியாது. இதனால் நிலத்தின் மதிப்பு 75% வரை குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசு வழங்கும் இழப்பீடு போதுமானதாக இல்லை என்கின்றனர் விவசாயிகள். 
எனவே விளைநிலங்களை சேதப்படுத்தாமல் சாலையோரம் குழாய்களை பதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் காங்கேயம் அடுத்த வீரசோழபுரம் ஊராட்சி சிகாரிபுரத்தில் கடந்த 17ம் தேதி முதல் விளைநிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய் பதிக்கும் பணி தூவங்க நிறுவன ஊழியர்கள் வந்தனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் கடந்த 3 நாட்களாக பணிகள் துவங்காமல் அந்தப் பகுதியில் விவசாயிகளை எதிர்ப்பு தெரிவித்து பந்தல் அமைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இன்று 4வது நாள் இன்று பணிகளை தொடங்கவிடாமல் வட்டாச்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய இழப்பீடு வழங்க வேண்டும் இல்லை என்றால் நிலத்திற்கு நிலம் வழங்கிவிட்டு பணிய தொடரட்டும் என தெரிவித்தனர். ஜேசிபி,ஹிட்டாச்சி இயந்திரங்களை விவசாய நிலத்தில் இருந்து வெளியே எடுத்து செல்ல வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டனர். இன்று காலை முதல் 100க்கு மேற்பட்ட காவலர்களை குவித்து வைத்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved