Also Watch
Read this
அமெரிக்காவில் நடந்த Grand Chess Tourல் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

வரலாறு படைத்த பிரக்ஞானந்தா
அமெரிக்காவில் நடைபெற்ற Grand Chess Tour - 2026 போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா.
இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஃபேபியானோவிடம் முதலில் பின்னடைவை சந்தித்த பிரக்ஞானந்தா, இறுதியில் கம்பேக் கொடுத்து 15-13 புள்ளிக் கணக்கில் வென்று, ரூ.1.91 கோடி பரிசுத் தொகையும் பெற்றார்.

முதல்வர் விஜய் வாழ்த்து
அமெரிக்காவில் நடந்த Grand Chess Tour-ல் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து முதல்வர் விஜய் கூறி இருப்பதாவது;
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மன உறுதி, மதிநுட்பம்...
உலகின் தலைசிறந்த வீரர்களுடன் நடைபெற்ற போட்டிகளில், அபாரமான மன உறுதியுடனும், மதி நுட்பத்துடனும் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது அவரது அசாதாரண ஆற்றலுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.

இந்த மகத்தான வெற்றி, இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது.

உலக அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைக்க பிரக்ஞானந்தாவை மனமார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு முதல்வர் விஜய் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved