Also Watch
Read this
By: Manigandan Raja

டிரம்பின் முடிவை நிராகரித்தார் கனடா பிரதமர் மார்க் கார்னி
கனடாவுடனான தனது வர்த்தக போரை தீவிரப்படுத்தும் விதமாக, ஒன்டாரியோ ஏரிக்கு "அமெரிக்கா ஏரி" ((LAKE AMERICA)) என பெயர் மாற்றப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஏரி இரு நாடுகளுக்கும் பொதுவானது என்பதால், கனடா அரசு இந்த பெயர் மாற்றத்தை ஏற்கப் போவதில்லை என்றும், தங்களுக்கு அது எப்போதும் "ஒன்டாரியோ ஏரி" தான் என்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் கோர தாண்டவம் ஆடிய திடீர் வெள்ளம்
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள திரிசூலி பஜாரில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம், குடியிருப்புகள் மற்றும் முக்கிய கட்டமைப்புகளை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. வெள்ளத்தின் போது மக்கள் அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி
தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து, செப்டம்பர் மாதம் Freedom Edge என்ற கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்த உள்ளன. செப்டம்பர் 7 முதல் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் பயிற்சி, ஜெஜு தீவுக்கு கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் நடைபெறுகிறது.

வட கொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையிலும் ,பாதுகாப்பு ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதும் பயிற்சியின் முக்கிய நோக்கமென அறிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved