Also Watch
Read this
அடுத்த தலைமுறை அரசியலில் வலிமையாக இருப்பதற்கு ஒரே காரணம் முதலமைச்சர் விஜய் என இயக்குநர் அட்லீ புகழாரம் சூட்டி உள்ளார்.

பத்தா பட தயாரிப்பாளர்...
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள, ’பத்தா’ பட இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் அட்லீ பேசியதாவது;
அரசியலில் அடுத்த தலைமுறையினர் வலுவாக இருப்பார்கள். அதற்கு ஒரே காரணம் விஜய் அண்ணன். நான் அரசியல்வாதியும் அல்ல, நான் அரசியல் பேசுவதும் இல்லை. என் முந்தைய தலைமுறையையும் பார்த்து இருக்கிறேன். ஆனால், இப்போது 5 வயது குழந்தைகளும் சட்டப்பேரவையை நேரலையில் பார்க்கிறார்கள்.

அரசியல் நமக்கானது
வலுவான தலைமுறையினரை விஜய் அண்ணா உருவாக்கி உள்ளார். அதில் சந்தேகமே கிடையாது. அரசியல் எல்லாம் நல்லதல்ல, சரி வராது என்றெல்லாம் முன்பு சொல்வார்கள். ஆனால், அது மாறி இருக்கிறது. அரசியல் நமக்கானது. அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் எப்படி பார்க்கிறோம் என்பது நமது மூளையைப் பொருத்தது. யாரும் நம்மை பாதிக்க முடியாது.

குட்டி ஸ்டோரி, மறைமுக தாக்கு?
துணி துவைக்கும் நபர் ஒருவர், அழுக்கு துணி மூட்டையை கழுதை மீது வைத்துச் சென்றார். “ஐந்தறிவு ஜீவனை வதைக்கிறாயே” என சிலர் கூறியதால், மூட்டையை தலையில் சுமந்து சென்றார். அடுத்த ஊரில், “கழுதை இருக்கும்போது நீ ஏன் சுமக்கிறாய்? அறிவு இருக்கிறதா?” என கேட்டனர்.

எவன் என்ன சொல்கிறான் என கேட்காதீர்கள், சின்னச் சின்ன பொறிகளில் சிக்கி விடாதீர்கள். சோசியல் மீடியாவில் இவர் அவரை சொல்கிறார், அவர் இவரை சொல்கிறார் என்பதெல்லாம் இல்லை. சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்.
இவ்வாறு அட்லீ பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved