news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

அஜித்திற்கு பொதுச்செயலாளர் பதவி, விஜய்க்கு போட்டியாக புதிய TMK?

"தல வந்தா மட்டும் போதும்"

33

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திரையுலகையும் தாண்டி தனக்கென தனிப் பாதையில் பயணிக்கும் நடிகர் அஜித்தின் பெயரை முன்வைத்து, அவரது ரசிகர்கள் கள்ளக்குறிச்சியில் தமிழக மக்கள் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.

லண்டனில் விஜய், அஜித்...
லண்டன் சென்ற முதல்வர் விஜய், அங்கே அஜித்குமாரை சந்தித்து பேசியது சாதாரண சந்திப்பு இல்லை என்றும், அஜித் ரசிகர்களின் ஓட்டுகளை தன் பக்கம் இழுப்பதற்காக விஜய் போட்ட அரசியல் கணக்கு என்றும் மக்கள் மத்தியில் பேச்சுகள் கிளம்பின. இதனால், அதிருப்தியடைந்த அஜித் ரசிகர்களோ, எங்கள் தலைவரின் அமைதியை யாரும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த கூடாது என்ற கொதிப்பிலும், அவர் வரவில்லையென்றால் என்ன, நாங்களே தனியாக களமிறங்குவோம் என்ற முடிவிலும் அடியெடுத்து வைத்திருக்கின்றனர்.

தமிழக மக்கள் கழகம்
இதன் வெளிப்பாடாகவே, கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் திரண்ட அஜித் ரசிகர்கள், தமிழக மக்கள் கழகம் எனும் புதிய கட்சியை முறைப்படி தொடங்கி, அதன் கொடியையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். மஞ்சள், வெள்ளை, சிவப்பு என மூவர்ண பின்புலத்தில், நடுவே கம்பீரமாக வீற்றிருக்கும் 2 சிறுத்தைகளின் உருவம் அடங்கிய இந்த கொடி, தற்போதைய அரசியல் சூழலில் பலரின் பார்வையை ஈர்த்துள்ளது. இக்கட்சியின் மாநில தலைவராக ஆபித், செயலாளராக ராம்குமார், பொருளாளராக முகமது ஷா ஆகியோர் நியமிக்கப்பட்டு ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

மாநில பொதுச்செயலாளர் அஜித்...
கட்சியின் கொள்கைகளாக மனிதநேயம் கொண்ட மதச்சார்பற்ற மக்கள் பணி, சாதி சமயமற்ற சமூகநீதி, இயற்கை வளப் பாதுகாப்பு, பெண்ணுரிமை மற்றும் தமிழ் மொழி வளர்ச்சி ஆகியவற்றை இவர்கள் அறிவித்து உள்ளனர். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அஜித்துக்காகவே கட்சியின் மிக உயரிய மாநிலப் பொதுச்செயலாளர் பதவியை காலியாக வைத்துள்ளதாக நிர்வாகிகள் அறிவித்திருப்பது தான். தல எப்போது சம்மதித்தாலும் இந்த கட்சி அவருக்கானது என ரசிகர்கள் முழங்குகிறார்கள்.

அரசியல் சுவாரஸ்யம்...
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த விஜய்யின் வெற்றி பயணம் ஒருபுறமிருக்க, அவரது வருகையையே முன்னுதாரணமாகக் கொண்டு புதிய கட்சிகள் முளைப்பதும், இன்னொரு புறம் அஜித்தின் பெயரையும் பிம்பத்தையும் வைத்து ரசிகர்கள் தமிழக மக்கள் கழகம் என அடியெடுத்து வைப்பதும் அரசியலை சுவாரசியமான களமாக மாற்றியுள்ளது.

Related Link
முதல்வர் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்

முதல்வர் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்திற்கு பொதுச்செயலாளர் பதவி, விஜய்க்கு போட்டியாக புதிய TMK?

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved