Also Watch
Read this
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை, திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறி, முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

கலந்துரையாடி மகிழ்ச்சி...
திருவான்மியூரில் பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதலமைச்சர் விஜய், மாணவர்களிடம் உணவு சுவையாக இருக்கிறதா? எனக் கேட்டு கலந்துரையாடி மகிழ்ச்சி அடைந்தார்.

முதல்வரைக் கண்டதும் மாணவர்கள் உற்சாகம்
மாநகராட்சி பள்ளியின் வகுப்பறைகளுக்கும் சென்று, முதலமைச்சர் விஜய் மாணவர்களை சந்தித்தார். அப்போது, முதல்வரை பார்த்ததும் மாம்பழமாம் மாம்பழம் RHYMES பாடி சிறார்கள் உற்சாகம் அடைந்தனர்.

சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், சாம்பார்
முதல்வர் விஜய் தொடங்கி வைத்த காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தில் பரிமாறப்பட்ட உணவுகள் மாணவர்களை மகிழ்ச்சிபடுத்தி உள்ளது. சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், சாம்பாரை உண்டு மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.

"CM SIR உடன் உணவு சாப்பிட்டது HAPPY"
CM SIR உடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டது மகிழ்ச்சியாக இருந்ததாக மாணவர்கள் நெகிழ்ச்சி தெரிவித்தனர். ’ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் எடுக்கிறார்களா?’ என முதல்வர் விஜய் கேட்டறிந்ததாகவும் தெரிவித்தனர்.
மாணவர்களுக்கு உணவு பரிமாறிய அமைச்சர்கள்
மாநிலம் முழுவதும் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள், பள்ளிச் சிறார்களுக்கு உணவு பரிமாறியதோடு, உடன் அமர்ந்து சாப்பிட்டு ஆனந்தம் அடைந்தனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved