Also Watch
Read this
46 கோடி ரூபாய் செக் மோசடி தொடர்பான நடிகை ராதாவின் புகாருக்கு நடிகை அம்பிகா மறுப்பு தெரிவித்துள்ளார். தனக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்காக ராதா தான், தனக்கு காசோலை கொடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

உழைத்து வாங்கிய சொத்து என அம்பிகா விளக்கம்
ஏ.ஆர்.எஸ். கார்டனை எம்.ஜி.ஆர். கொடுத்ததாக கூறுவதை ஏற்க முடியாது என நடிகை அம்பிகா திட்டவட்ட மறுப்பு தெரிவித்து உள்ளார்.

ராதாவும், தானும் உழைத்து சேர்த்த சொத்து என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

ராதாவை எண்ணி கண்ணீர் விட்ட அம்பிகா
தங்கை ராதா அளித்த போலீஸ் புகார் குறித்து நடிகை அம்பிகா கண்ணீர் விடுத்தார்.

சிறு வயதிலிருந்து அன்பாக வளர்ந்து, சொத்துக்காக திருட்டுப் பட்டம் கட்டியதை ஏற்க முடியவில்லை என வெதும்பி உள்ளார்.

“ராதா தான் செக் வழங்கினார்”
ராதா செக் கொடுத்தது உண்மை, அந்த செக் திரும்பியது உண்மை; ARS காா்டனில் எனக்கு உள்ள பங்கை அபகாித்துவிட்டாா் ராதா. சொத்துத் தகராறுகளை தீா்க்க ராதா தான் ரூ.46 கோடிக்கான காசோலை வழங்கினாா் என்றும் அம்பிகா கூறி உள்ளார்.

பணம் காச கண்டுபுட்டா...
சகோதரியும், நடிகையுமான ராதா தன் மீது செக் மோசடி புகார் அளித்த நிலையில், ரஜினியுடன் தான் நடித்த படிக்காதவன் படத்தின், “ஊர தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்” என்ற பாடலின் “பணம் காச கண்டுபுட்டா புலி கூட புல்லத்தின்னும்...” என்ற வரிகளை இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்த நடிகை அம்பிகா.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved