news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ், கபடி, ஹாக்கியில் இந்தியா அபாரம்

முதல் பதக்கம்

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Asia game

10 ஆயிரம் மீட்டர் மாரத்தான் இந்திய வீராங்கனை சீமா குமாரி வெண்கலம் வென்றார்

  • ஆசிய விளையாட்டு மகளிர் 10 ஆயிரம் மீட்டர் மாரத்தான் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் சீமா குமாரி, 32 நிமிடங்கள் 50 வினாடிகள் ஓடி பந்தய தூரத்தை அடைந்து வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம், தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

ஸ்குவாஷ் போட்டி இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

  • ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா - வேலவன் செந்தில் குமார் ஜோடி, சக நாட்டு வீரர்கள் சூரச் சந்த் - ஷமீனா ரியாஸ் ஜோடியை எதிர்கொண்டது.
  • இதில், ஜோஸ்னா - வேலவன் ஜோடி 11-க்கு 7, 11-க்கு 10 என வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

கபடி போட்டியில் இந்தியா அபாரம் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது

  • ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. சுனில்குமார் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை 49க்கு 24 என்ற கணக்கிலும், 2-வது போட்டியில் 63-க்கு 31 என்ற கணக்கில் தென் கொரியாவையும், 3-வது ஆட்டத்தில் வங்கதேசத்தை 48-க்கு 25 என்ற புள்ளிக்கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.

ஆசிய விளையாட்டு ஹாக்கி லீக் போட்டியில் இந்தியா அபாரம்

  • ஆசிய விளையாட்டு ஹாக்கி லீக் போட்டியில், இந்திய அணி 8-க்கு 2 என தென்கொரியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்று, 9 புள்ளிகளுடன் அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டது. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு தில்பிரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து கைகொடுத்தார்.


Related Link
இந்தியா–ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி & புதிய தேர்வுக் குழு தலைவர்

இந்தியா–ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி & புதிய தேர்வுக் குழு தலைவர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

“சிக்மா” 4-வது பாடல் வெளியீடு & விஜய் சேதுபதியின் “பத்தா”

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved