கர்நாடகாவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பயிற்சி விமானம் அவசரமாக விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்டது. ரெட் போர்ட் விமான பயிற்சி பள்ளிக்கு சொந்தமான இந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கலபுர்கி விமான நிலையம் அருகே உள்ள பாலா கிராமத்தில் தரையிறக்கப்பட்டது.
நின்றிருந்த டிரெய்லரின் பின்புறம் பயங்கரமாக மோதிய பொலிரோ
குஜராத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரெய்லரின் பின்புறம் பொலிரோ வாகனம் மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அலங் பகுதியில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாவ்நகரில் இருந்து பொலிரோ வாகனத்தில் வேலைக்கு சென்றபோது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரெய்லரின் பின்புறம் மோதியது.
முதிய தம்பதி உட்பட 3 பேர் திருப்புளியால் குத்திக் கொலை
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கூலி பணத் தகராறில் முதிய தம்பதி உட்பட 3 பேரை திருப்புளியால் குத்திக் கொலை செய்த உத்தரப் பிரதேச பிளம்பரை போலீஸார் கைது செய்தனர். ஓய்வுபெற்ற ஆலை மேலாளர் ரமேஷ், வீட்டின் குளியலறை மற்றும் சமையலறை பிளம்பிங் வேலைகளுக்காக பிளம்பர் ராஜ்குமாரை அழைத்திருந்தனர்.
வேலை முடிந்த பிறகு, கூலி பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.