news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு? முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

இந்தியா கூட்டணியில் தவெக

35

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இந்தியா கூட்டணி கூட்டத்துல தவெக அமைச்சர்கள் கலந்துகிட்டதுக்கு காரணமே ராகுல் காந்தி ஸ்டாலின் சந்திப்புக்கு ஏற்பாடு நடந்ததுதானாம். டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் விரும்புன ராகுல்-ஸ்டாலின் சந்திப்பு கடைசி நேரத்துல கேன்ஸலானதா பேசிக்கறாங்க.

தமிழக காங்கிரஸோட தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன்ல நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்துல தவெக அமைச்சர்களான ஆதவ் அர்ஜூனாவும், மரிய வில்சனும் திடீர்னு கலந்துக்கிட்டாங்க.

ஆரம்பத்துல தவெகவுக்கு எம்.பி.க்கள் இல்லாதப்போ இந்தியா கூட்டணியில இருக்க வேண்டிய அவசியமில்லைன்னு ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களே பேசுனாங்க.

ஆனால், இந்தியா கூட்டணி கூட்டத்துல தவெக திடீர்னு கலந்துக்கிட்டதுக்குக் காரணமா ஒரு முக்கியமான சந்திப்பை சுட்டிக் காட்டுறாங்க. 10ம் தேதி சென்னைக்கு வர்ற ராகுல் காந்தி மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில கலந்துக்குறாரு. சென்னைக்கு வர்றப்போ மரியாதை நிமித்தமா ஸ்டாலினை சந்திச்சுப் பேச மல்லிகார்ஜுன கார்கே தரப்புல இருந்து ராகுல்குக்கு யோசனை சொல்லப்பட்டதாம். சோனியாவுமே இந்த சந்திப்புக்கு பச்சைக் கொடி காட்டுனாங்களாம்.

அரசியல் ரீதியா இல்லைன்னாலும், நட்பு ரீதியா சந்திக்கலாம்னு டெல்லியில இருக்கற ஒருபிரிவு காங்கிரஸ் தலைவர்களும் ராகுலுக்கு யோசனை சொன்னாங்களாம். ஆனால், இதுபத்தி திமுக தரப்புல எதுவும் சொல்லாம அமைதி காத்ததா சொல்லப்படுது.

இந்த தகவல்கள் முதல்வர் விஜய் காதுக்கு வர, உடனடியா இந்தியா கூட்டணியில தவெக இருக்குங்கறதையும், காங்கிரஸோட நெருக்கமா இருக்கோம்ங்கறதை காட்டவும்தான் சத்தியமூர்த்தி பவன் கூட்டத்துல அமைச்சர்களை கலந்துக்க சொன்னாராம் முதல்வர்.

Related Link
முதல்வர் விஜய் பாதுகாப்பு குறித்து வந்த அவசர ’அலர்ட்’

முதல்வர் விஜய் பாதுகாப்பு குறித்து வந்த அவசர ’அலர்ட்’


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

TVK கொடியை பயன்படுத்தி பாலியல் அத்துமீறல்? கைது

37
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved