news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

எலி கடித்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மருந்து தட்டுபாடு

ஊசி இல்லை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஊசி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே களம்பூர் கிராமத்தில் செந்தமிழ்ச்செல்வன்–திவ்யா தம்பதியரின் 3 வயது மகன் ஜஸ்வந்த். இவர் இன்று காலை
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எலி கடித்துள்ளது.

இதையடுத்து சிறுவனை அவரது தந்தை செந்தமிழ்ச்செல்வன் உடனடியாக களம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த செவிலியர்கள், சிறுவனுக்கு ஊசி செலுத்த வேண்டும் என்றும், மருத்துவமனையில் ஊசி இல்லை என்பதால் அருகிலுள்ள மருந்தகத்தில் ஊசி வாங்கி வருமாறும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுவனின் தந்தை அருகிலுள்ள மருந்தகத்திற்குச் சென்று ஊசியை வாங்கி வந்து செவிலியர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த ஊசியை சிறுவனுக்கு செலுத்தி சிகிச்சை அளித்துவிட்டு வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.


மருத்துவமனையில் ஊசி இல்லாததால், சிறுவனின் தந்தையே மருந்தகத்தில் ஊசி வாங்கி வந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
அமைச்சர் வன்னி அரசு பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்

அமைச்சர் வன்னி அரசு பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கிறிஸ்டியானா ரொனால்டோ வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved