Also Watch
Read this
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்ஆர்காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
இடைத்தேர்தல்...
புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளில் முதலமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார். 2 தொகுதியிலும் வெற்றி பெற்ற அவர், தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த 6ஆம் தேதி நடந்தது. தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் அசோக்ஆனந்த், திமுக சேதுசெல்வம், காங்கிரஸ் விநாயகம், இந்திய கம்யூனிஸ்டடு சலீம் உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இடைத் தேர்தலில் 80.81 சதவீத ஓட்டுகள் பதிவானது.

வாக்கு எண்ணிக்கை
தேர்தலில் பதிவான ஓட்டு எந்திரங்கள் லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் 3 அடுக்கு பாதுகாப்போடு ஸ்ட்ராங் அறையில் வைக்கப்பட்டது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணியளவில் ஓட்டு எண்ணும் மையத்துக்கு வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதிக்கப்பட்டனர். முகவர்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு, சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். முகவர்கள் செல்போன் உட்பட மின்னணு சாதனங்கள் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை.

பலத்த பாதுகாப்பு
ஓட்டு எண்ணிக்கையையொட்டி லாஸ்பேட்டை மோதிலால்நேரு பாலிடெக்னிக் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சாலைகளில் பேரிகார்டுகள் வைத்து வாகன போக்குவரத்தை போலீசார் கட்டுப்படுத்தினர். வெற்றி ஊர்வலத்தில் அசம்பாவிதத்தை தடுக்க தட்டாஞ்சாவடி தொகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தபால் ஓட்டு எண்ணிக்கை
முதலில் தபால் ஓட்டு எண்ணப்பட்டது. மொத்தம் 112 தபால் வாக்குகள் பதிவானது. இதில் 65 வாக்குகள் பெற்று என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் முன்னிலை பெற்றார். தொடர்ந்து 8.30 மணிக்கு தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ஓட்டு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது.
சுற்று வாரியாக ஓட்டு எண்ணிக்கை விபரம்
முதல் சுற்று:
அசோக் ஆனந்த் (என்ஆர்.காங்) - 3209
விநாயகம் (காங்கிரஸ்) - 1222
சேதுசெல்வம்(திமுக) - 792
சலீம் (இந்திய கம்யூ.) - 71
கார்திக் குமாரி (நாதக) - 53

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved