news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews
tv

Also Watch

குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா?

முக்கிய தேதிகள், தகுதிகள் & சம்பள விவரம்

29

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்காங்க.
இந்த முறை மொத்தம் 6,574 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கு. யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், என்ன தகுதி, முக்கிய தேதிகள் என்ன?

கிராம நிர்வாக அலுவலர்
இளநிலை உதவியாளர்
தட்டச்சர்
சுருக்கெழுத்து தட்டச்சர்
பில் கலெக்டர்
வரி வசூலிப்பாளர்
வனக் காவலர்
இதுபோக பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள்ல இருக்கிற காலிப் பணியிடங்களும் இந்த ஒரே ஒரு தேர்வு மூலமா நிரப்பப்பட போகுது.

இந்த பதவிகளுக்கான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு என்னன்னா? பெரும்பாலான பதவிகளுக்கு நீங்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே தாராளமா விண்ணப்பிக்கலாம். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்குத் தட்டச்சுப் பயிற்சி முடிச்சிருக்கணும்.
வயது வரம்பை பொறுத்தவரைக்கும், விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் நிரம்பியிருக்க வேண்டும். VAO மற்றும் சில பதவிகளுக்கு 21 வயது, அதிகபட்ச வயது வரம்பு நீங்க சார்ந்திருக்கும் பிரிவைப் பொறுத்து மாறுபடும்.

இதற்காக விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள் அக்டோபர் 6, 2026 முதல் ஆன்லைன் விண்ணப்பம் ஓப்பனா இருக்கு.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 5, 2026 இரவு 11:59 மணி வரை
விண்ணப்பத் திருத்த காலம் நவம்பர் 9 முதல் நவம்பர் 11, 2026 வரை
தேர்வு நடைபெறும் நாள் ஜனவரி 10, 2027
நேரம் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தேர்வுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது, மெயின்ஸ் தேர்வும் கிடையாது. ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மட்டும்தான்.
மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் பொதுத் தமிழ் பகுதியிலிருந்தும், 75 கேள்விகள் பொது அறிவு பகுதியிலிருந்தும், 25 கேள்விகள் ஆப்டிடியூட் மற்றும் மெண்டல் எபிலிட்டி (Aptitude & Mental Ability) பிரிவிலிருந்தும் வரும். இதுல தமிழ் தகுதித் தேர்வுல பாஸ் பண்றது ரொம்ப முக்கியம்.

அரசு வேலைக்கு போக நினைக்குறவங்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. தகுதியானவங்க உடனே TNPSCஇன் அதிகாரப்பூர்வ இணையதளத்த்துக்குப் போய் விண்ணப்பிக்கலாம்.
https://www.tnpsc.gov.in/ போய் விண்ணப்பிக்கலாம்.

Related Link
குரூப் தேர்வா? குளறுபடி தேர்வா?

குரூப் தேர்வா? குளறுபடி தேர்வா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் கட்டணம் உயர்வு

41
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved