Also Watch
Read this
By: Manigandan Raja

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிர்ச்சி
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் உதவியாளர் மன்ஜித் சிங் சித்து, சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
பகவந்த் மானின் சிறப்பு பணி அதிகாரியாக இருந்த சித்து, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு உத்திகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றி வந்தார்.
விமானங்களில் MOBIKINS பவர்பேங்க் கொண்டு செல்ல தடை

இந்தியாவில் அனைத்து விமானங்களிலும் பயணத்தின்போது MOBIKINS பவர்பேங்க் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமானத்தில் பவர் பேங்கால் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிரடியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பெண்ணை சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற திருடர்கள்

அசாமில் கைப்பையை பறிக்கும் முயற்சியில் பெண்ணை தரதரவென சாலையில் இழுத்துச் சென்ற பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கவுஹாத்தியின் கஹிலிபாரா பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம், டூவீலரில் வந்த 2 இளைஞர்கள் அவரது கைப்பையை பறிக்க முயன்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved