Also Watch
Read this
By: Manigandan Raja

ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பண்ணைப்பட்டி ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து
நேர்த்திக்கடன் செலுத்தினர்
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பண்ணைப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாடு நடைபெற்றது.
குறும்பர் இன மக்கள் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் ஆண்டுதோறும் ஒருமாத காலம் விரதம் இருந்து புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை அன்று ஸ்ரீ மகாலட்சுமி
அம்மன் கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை கோவில் பூசாரி அழகர்ராஜ் தொடங்கி வைப்பார்.
அதே போன்று இந்த ஆண்டும் குறும்பர் இன பாரம்பரிய இசைக்கு ஏற்ப பாரம்பரிய வீரமுஸ்தி நடனமாடியும், பாரம்பரிய முறைப்படி கம்பளி போர்வை ஊர்வலமாக சுமந்து வந்து, கொடிமரத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர் வரிசையாக அமர்ந்திருந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் பூசாரி அழகர்ராஜ் தேங்காயை உடைத்து அவர்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். மேலும் இந்த வினோத வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved