news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

CM விஜய் அழைத்தால் தவெகவில் இணைவேன் - வாட்டர் மெலன் ஸ்டார்

படிப்பை ஆயுதமாக எடுக்க வேண்டும்

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Diwahar

வன்முறையால் குடும்பங்கள் சீரழிகிறது :


இளைஞர்கள் வன்முறையை கைவிட்டு பழி தீர்ப்பதை கைவிட வேண்டும் இனியும் ஒரு உயிர் போகக்கூடாது சுள்ளான் மதன் மனைவி குழந்தைகள் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது .பட்டாகத்தி தூக்கும் கலாச்சாரம் என்று ஒழிகின்றதோ அப்போதுதான் தென் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் நல்ல முறையில் வருவார்கள். 

பட்டா கத்தியால் வெட்டி கேக் வெட்டி கொண்டாடுவது பெரிய விஷயம் கிடையாது படிப்பை ஆயுதமாக எடுக்க வேண்டும் கல்வியை ஆயுதமாக எடுக்க வேண்டும் வன்முறையை தவிர்க்க வேண்டும் வன்முறையால் குடும்பங்கள் சீரழிகிறது.

சுள்ளான் மதனுடைய ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் பழி தீர்ப்போம் தலைகள் உருளப்படும் என பதிவிடுகிறார்கள் அந்த மாணவர்களுக்கு தலைவணங்கி கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் பழிவாங்கும் எண்ணம் வேண்டாம் சுள்ளான் மதனுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் அவரது குழந்தையை படிக்க வைக்க உதவி செய்யுங்கள்; சுள்ளான் மதனின் மகனை மருத்துவர் கலெக்டராக நீதிபதியாக மாற்றுங்கள் என சபதம் எடுங்கள்.

தலைகள் உருளும் என்ற சவால் வேண்டாம்; சென்னை பட்டினப்பாக்கத்தில் செல்பி எடுக்கிறேன் என்று சொல்லி என்னிடம் 18 19 வயசு பசங்க சர்ட்வாளை எடுத்தார்கள் கேமிராமேன் தான் காப்பாற்றினார்.

மருது பாண்டியர்கள் ஆண்ட சீமையான சிவகங்கை இப்போது கொலைக்களமாக பார்ப்பது மனசு கஷ்டமாக இருக்கிறது எந்த ஆட்சி இருந்தாலும் எந்த நடந்தாலும் குற்ற சம்பவங்கள் நடக்க தான் செய்யும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என பாடல் பாடிய அறிவுரை வழங்கிய திவாகர். விஜய் ஆட்சியில் ரொம்ப Desicpline உள்ளது. அதையும்
மீறி குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது நம்மளே நாம் திருந்தினால் தான் யாரையும் குறை சொல்ல முடியாது.

இளைஞர்கள் கத்தியை தூக்காதீங்க புத்தியை தீட்டுங்கள்; நான் செல்லும் இடங்களில் எல்லாம் படித்த படிப்புக்கு தான் மரியாதை; கத்தியை தூக்குறது வெட்டுவது பைக் ரேஸ் போன்றவை ஆபத்தை உருவாக்கும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டாம்

சமூக வலைதளங்களில் நம்பரை பதிவிட்டு கிப்ட் கேட்பது அநாகரிகம்.

ஆன்லைன் டெலிவரி என்ற பெயரில் எனக்கும் கேஷ் ஆன் டெலிவரில் பார்சல்கள் அனுப்புகிறார்கள் எனக்கு கிப்ட் கொடுங்கள் என போன் நம்பரை போட்டு கேட்பது தன்மான செயல் அல்ல;
படித்த இளைஞர்கள் உங்கள் கஷ்டம் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள் சமூக வலைதளங்களில் யாரிடமும் எதனை கேட்காதீர்கள் இது நல்லாவே இல்லை; எனக்கு கேஷ் ஆன் டெலிவரி பார்சல் அனுப்புகிறார்கள் இதனை சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்; சமூக வலைதளங்களில் நம்பரை பதிவிட்டு கிப்ட் கேட்பது அநாகரிகம்.


அய்யயோ நான் ஸ்வீட் பாக்ஸ் கேட்கவே இல்லை சார் என்னுடைய கிளினிக் அட்ரஸ் ஏற்கனவே கொடுத்து வைத்திருந்தேன் அதில் பார்சல் அனுப்புகிறார்கள்; எல் இ டி டிவி ,பிரிட்ஜ் ,வாஷிங் மெஷின் அனுப்புகிறார்கள் எங்க வீட்டில் அது ஏற்கனவே இருக்கிறது எனக்கு தன்மானம் தான் முக்கியம்.

எனக்கு கிப்ட் கொடுங்கள் என சமூகவலைதளங்களில் கேட்பது கௌரவமான விஷயம் அல்ல நம்பர் ஒன் அநாகரீகம் 5 படங்களில் நடித்து வருகிறேன்.

மூர்த்தி கேரக்டருக்கு பதிலாக திவாகர்

ஜெயிலர் 2 போனேன் அங்கே சூப்பர் ஸ்டார் கோட்டை அங்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் என்னுடன் செல்பி எடுத்து வாட்டர் மிலன் ஸ்டார் என கத்தினார்கள் அதை பார்த்து சந்தோஷமாக இருந்தது; ஜெயிலர் 2 மூர்த்தி கேரக்டருக்கு பதிலாக திவாகர் நடித்திருந்தால் நல்லா இருக்கும் என அதிகமாக வசூல் ஆகி இருக்கும் என சொன்னார்கள். 

பிக் பாஸ் நீங்க இருக்கும்போது கள்ளங்க படமாக விளையாடினார்கள் நல்லா இருந்தது இப்போது நல்லா இல்லை என கூறுகிறார்கள் ; பிக்பாஸில் சென்றதற்கு பின்பு டீக்கடையில் உட்கார்ந்து டீ கூட குடிக்க முடியவில்லை அவ்வளவு ரசிகர்கள் உள்ளார்கள்.

விஜய் சாரை காலம் ஒரு நாள் கண்டிப்பாக மீட் பண்ண வைக்கும்.

அரசியலுக்கு இப்போதைக்கு ஐடியா இல்லை எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக வருவேன் ; எம்ஜிஆர் சாருக்கு அப்புறம் விஜய் சார் தான் விஜய் சார் பர்சனலா வாட்டர் மிலன் தம்பி வாங்க என கூப்பிட்டால் செல்வேன் பதவிக்கு ஆசை இல்லை எம்எல்ஏ சீட் கொடுத்தால் யூஸ் பண்ணிக்கிறேன் ஐ அம் நாட் இன்டர்ஸ்டெட் ; விஜய் சாரை காலம் ஒரு நாள் கண்டிப்பாக மீட் பண்ண வைக்கும்.

விஜய் சேதுபதி சாரி பார்க்க வைத்தது போல இந்த வாய்ப்பு ஒரு நாள் அமையும் சோசியல் மீடியாவில் எடப்பாடி சார் முகத்தோடு வைத்து மீம்ஸ் போடுகிறார்கள் எலெக்ஷன் ரிசல்ட் வந்தால் எனது போட்டோவை போடுகிறார்கள்

அமைச்சர் வீட்டில் ரெய்டு போனாலும் என்னுடைய முகத்தை வைத்து மீம்ஸ் போடுகிறார்கள் ; எங்கு பார்த்தாலும் நமது மீம்ஸ் தான் சட்டசபையின் வாட்டர் மெலன் என பொதுப்பணித்துறை அமைச்சரை போடுகிறார்கள் ; பிக் பாஸ் எனக்காக மு க ஸ்டாலின் பார்க்கிறார் என சவுக்கு சங்கர் கூறினார். யார் வீட்டில் ரைடு போனாலும் என் போட்டோவை போட்டு மீம்ஸ் போடுகிறார்கள் நான் வருவதற்கு முன்பாக நடிப்பு அரக்கன் என்ற பெயர் இல்லை.

Related Link
மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்து புகைப்படம் எடுக்கிறார் தனுஷ்

மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்து புகைப்படம் எடுக்கிறார் தனுஷ்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved