news-tamil-logo

3/22/2026, 12:23:55 PM

news-tamil-logo
more
Advertisement
Home district-news நடிகர் ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி ஒருவர் உயிரிழப்பு.. கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் போலீசாரால் கைது..
tv

Also Watch

tv

Read this

நடிகர் ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி ஒருவர் உயிரிழப்பு.. கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் போலீசாரால் கைது..

ஓட்டுநர் போலீசாரால் கைது

Posted on: Aug 30, 2024 08:40 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி 55வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழப்பு. ரேகா நாயரின் டிரைவரை கைது செய்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை.

ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்த மஞ்சன்(55) என்பவர் மது போதையில் ஜாபர்கான்பேட்டை பச்சையப்பன் தெரு பகுதியில் படுத்து கிடந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று மஞ்சன் மீது ஏறி இறங்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பரிசோதித்த மருத்துவர்கள் மஞ்சன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் எண்ணை வைத்து கார் ஓட்டுநர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாண்டி25 என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பாண்டி அடையாறில் உள்ள நடிகை ரேகா நாயரின் கார் ஓட்டுநர் என்பதும், நடிகை ரேகா நாயரின் பெயரில் தான் இந்த கார் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
24 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved