news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 4 சவரன் நகைக்காக கொடூரக் கொ*, காட்டிக் கொடுத்த செல்போன் டவர்
tv

Also Watch

4 சவரன் நகைக்காக கொடூரக் கொ*, காட்டிக் கொடுத்த செல்போன் டவர்

சிக்கிய 3 பேர் யார்? நடந்தது என்ன?

15

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலத்தில், தண்ணீர் தொட்டியில் பெண்ணின் உடல் பாகங்களை மூட்டையில் கட்டி வீசிய சம்பவத்தில் திடீர் திருப்பமாக, 4 சவரன் நகைக்காக ஆண் நண்பருடன் சேர்ந்து ஒரு பெண் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது. விசாரணை வளையத்தில் சிக்கிய 3 பேர் யார்? அவர்கள் அளித்த வாக்குமூலம் என்ன? கொ* செய்வதற்கான இடத்தை தேர்வு செய்தது எப்படி?

தண்ணீர் தொட்டியில்...
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் வீட்டில் இருந்த தண்ணீர் குழாயில் துர்நாற்றம் வீசிய நிலையில், டேங்கில் சென்று பார்த்த போது இரண்டு மூட்டைகள் இருந்தன. இதனை எடுத்து பார்த்த போது உள்ளே உடல் பாகங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு, உடனே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தாதனூரை சேர்ந்த தங்கமணி
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயவியல் துறை உதவியுடன் உடல் பாகங்கள் மீட்டு உயிரிழந்தவர் யார்? கொ* செய்தவர்கள் யார்? கொ*க்கான காரணம் என்ன? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர். முதலில் உயிரிழந்தது சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி அடுத்த தாதனூரை சேர்ந்த தங்கமணி என்பது தெரியவந்தது. உயிரிழந்த தங்கமணி கையில் தந்தை கணபதி பெயர் பச்சை குத்தி இருந்ததால் அதனை வைத்து உறவினர்கள் மூலம் உறுதி செய்தனர்.

வீட்டுக்கு வர வைத்து...
தங்கமணி, வீட்டு சமையல் மற்றும் கேட்ரிங் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பேருந்து பயணத்தின் போது நந்தினி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. பணத் தேவைக்காக ஒரு வீட்டில் வேலை இருப்பதாக அரிசிபாளையம் பகுதியில் உள்ள சித்தி பிரபாவதி வீட்டிற்கு தங்கமணியை வரவழைத்த நந்தினி, ஆண் நண்பரான மாலிக் பாஷா மற்றும் அவரின் நண்பர் சிவசங்கர் 3 பேரும் சேர்ந்து கொ* செய்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

தண்ணீர் தொட்டியில்...
ஆட்கள் நடமாட்டம் இல்லாததோடு சிசிடிவி கேமரா இல்லாத பகுதி என்பதால் சித்தி பிரபாவதி வீட்டிற்கு வரவழைத்து கொ* செய்ததோடு, அவரிடம் இருந்த 4 சவரன் நகையை எடுத்து கொண்டு உடலை கை, கால் என தனித்தனியாக வெட்டி மூட்டை கட்டி அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த தண்ணீர் தொட்டியில் வீசியதாக சிக்கியவர்கள் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

4 சவரன் நகைக்காக...
உடல் பாகங்களை துண்டு, துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசிய 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செல்போன் சிக்னல் மூலம் கொ* சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்த போது 4 சவரன் நகைக்காக கொ* செய்தது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Related Link
எரிந்து கிடந்த மூதாட்டி, 55 சவரன் மிஸ்ஸிங், கூடவே இருந்து குழிபறித்த இளைஞர்

எரிந்து கிடந்த மூதாட்டி, 55 சவரன் மிஸ்ஸிங், கூடவே இருந்து குழிபறித்த இளைஞர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

‘ராஜன் வகையறா’ படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved