கேரளாவை சேர்ந்த அழகு நிலைய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு ரயிலில் தப்பிய அசாம் மாநிலத்தை சேர்ந்த இருவரை ஜோலார்பேட்டையில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்தனர். பத்தின தட்டா மாவட்டம் கோணி என்ற இடத்தில் உள்ள பியூட்டி பார்லரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் பெண் பியூட்டிசனாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், பணி முடிந்து தனியாக சாலையில் சென்று கொண்டிருந்த அவரை, அசாம் மாநிலத்தை சேர்ந்த இருவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.