திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சிந்து மெட்ரிக் மேல்நிலை பள்ளி விடுதி துணை காப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்த மாணவர்களை அடித்து மிரட்டல் விடுத்ததாக பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் பாண்டியன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். சிந்து மெட்ரிக் மேல்நிலை பள்ளி விடுதியில் தங்கி படித்த தங்களுக்கு விடுதியின் துணை காப்பாளர் சரண் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக மாணவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து, பள்ளி தாளாளர் சுரேஷ்குமார், விடுதி காப்பாளர் ராம்பாபு, துணை காப்பாளர் சரண் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர்.