Also Watch
Read this
Posted on: May 06, 2025 12:14 PM
By: Srini Vasan

தேனியில் உள்ள மீறு சமுத்திரம் கண்மாயில் ஆகாய தாமரை நிறைந்து காணப்படுவதால், அதனை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மீறு சமுத்திரம் கண்மாய் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர ஆதாரமாக திகழ்ந்து வருகிறது.
120 ஹெக்டர் பரப்பளவு கொண்ட மீறு சமுத்திரம் கண்மாயில் நீர் நிரம்பினால் இரண்டு ஆண்டுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படும்.
இந்நிலையில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய் முழுவதும் ஆகாய தாமரை நிறைந்துள்ளதால், நிலத்தடி நீர் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved