Also Watch
Read this
By: Fyrose Banu

சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் விதமாக மலைச்சாலை பகுதிகளில் பூத்துக் குலுங்கும் மஞ்சூர் ராணி பூக்கள், ட்ரோன் காட்சி கண்ணை கவர்ந்துள்ளது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது வழக்கம்.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாகவும் , கண்களை கவரும் விதமாகவும் கொடைக்கானல் மலைப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் தற்போது மஞ்சூர் ராணி பூக்கள் பூத்துக் குலுங்குகிறது.

குறிப்பாக பிரதான மலைச்சாலையின் ஓரத்தில் மரத்திற்கு மேல் இயற்கையின் அழகை மெருகூட்டும் விதமாக இந்த மலர்கள் காட்சி அளிக்கிறது. பெரும்பாலும் மஞ்சூர் ராணி பூக்கள் மலைப்பிரதேசங்களில் மட்டும் அதிகம் பூக்கக்கூடிய பூக்கள் ஆகும். குறிப்பாக தற்போது மிதமான காலநிலையில் அவ்வபோது லேசான சாரல் மழை பெய்து வருவதால் பசுமையான மலைப்பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மஞ்சூர் ராணி பூக்கள் ரம்யமாக காட்சியளிக்கிறது.

மேலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மலைப்பாதையில் பயணிக்கும் போது தற்போது மஞ்சூர் ராணி பூக்கள் பூத்து காட்சியளிப்பது சுற்றுலா பயணிகளை மேலும் கவர்ந்திழுக்கும் வண்ணமாக உள்ளது. இதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது மட்டுமில்லாமல் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved