Also Watch
Read this
By: Web Team

இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு நெருக்கடி அதிகரித்திருப்பதாகவும், மத நல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கும் சக்திகளின் கொட்டம், நீண்ட நாள் நீடிக்காது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில், தனியார் பள்ளி நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஒரு காலத்தில் கல்வி என்பது, நமக்கு மறுக்கப்பட்ட ஒன்று. ஏராளமான போராட்டத்திற்கு பின்னரே, கல்விக் கதவு திறக்கப்பட்டது. இப்போதும் கல்விக்காக போராடும் மக்கள் இருக்கிறார்கள்.
இந்திய அளவில் பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. அதற்கு சில மாநில அரசுகளே துணை போகின்றன.
இந்தியாவில், இதுவரை இல்லாத அளவிற்கு சிறுபான்மையினர் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது நிரந்தரம் அல்ல. இந்தியாவின் மத நல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கும் சக்திகளின் கொட்டம், நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.
உங்களின் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள். பொழுதுபோக்கு வாழ்வின் ஒரு அங்கம் தான். ரீல்ஸில் பார்ப்பதை ரியாலிட்டி என்று நம்பாதீர்கள். லைக்ஸ், ரீல்ஸ் ஆகியவை கெத்து இல்லை.. மதிப்பெண்களும், டிகிரியும் தான் கெத்து..
படிப்பது போல நன்றாக விளையாட வேண்டும். அதற்கான உடல்நலனும் முக்கியம். கல்வி, நண்பர்கள், சூழல் தான் குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும்.
ஒரு பிரச்சனை என்றால், பயமின்றி பகிரும் அளவுக்கு பெற்றோர், நம்பிக்கையை கொடுக்க வேண்டும். பிள்ளைகளும், தங்களது பெஸ்ட் ஃபிரண்ட் யார்? என்று கேட்டால், அப்பா, அம்மா என்று சொல்ல வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved