Also Watch
Read this
Posted on: Apr 20, 2025 12:50 PM
By: Srini Vasan

நீலகிரியில் இ பாஸ் பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நாடுகாணி சோதனை சாவடியில் நீண்ட வரிசையில் சுற்றுலா வாகனங்கள் காத்திருந்தன.
நீலகிரி மாவட்டத்திற்கு வார நாட்களில் ஆறு ஆயிரம் வாகனங்களுக்கும் வார இறுதிநாட்களில் எட்டு ஆயிரம் வாகனங்களும் மட்டுமே வந்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் வார விடுமுறை தினம் என்பதால், கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
நெட்வொர்க் ப்ராப்ளம் காரணமாக இ பாஸ் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதால், 3 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்த சுற்றுலா பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved