Also Watch
Read this
Posted on: Apr 22, 2025 03:27 PM
By: Srini Vasan

சென்னை அடுத்த காரப்பாக்கத்தில் ஆள் இல்லாத நேரத்தில் வீட்டை திறந்து 20 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த டில்லிபாபு என்பவர் தனது வீட்டை பூட்டி சாவியை வெளியில் வைக்கப்பட்டிருந்த ஷூ விற்குள் வைத்து விட்டு வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இதனை நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் டில்லிபாபு வேலைக்கு சென்ற பிறகு ஷூ வில் வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டில் பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளித்ததார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved