news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மீண்டும் பணி வழங்ககோரி பெண் காவலர் இந்திரா காந்தி தர்ணா
tv

Also Watch

மீண்டும் பணி வழங்ககோரி பெண் காவலர் இந்திரா காந்தி தர்ணா

தூத்துக்குடி

4

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tut 1

தூத்துக்குடி பாலியல் புகாரில் சிக்கி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் காவலர் இந்திரா காந்தி மீண்டும் தனக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.  தெற்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா காந்தி பெண் காவலர் இவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் போது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஒரு உடன் நெருங்கி பழகி அவரை பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்திரா காந்தியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல் உதவிஆய்வாளரும் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்த நிலையில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் காவலர் இந்திரா காந்திக்கு காவல்துறை சார்பில் மீண்டும் பணி வழங்கப்படவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் இந்திரா காந்தி தன்னை மீண்டும் பணியில் சேர்க்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு அளித்துள்ளார் ஆனால் இதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை

இதை. தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் காவலர் இந்திரா காந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகன முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் தனக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பணி நீக்க காலத்தில் கிடைக்கக்கூடிய உதவித்தொகையும் முறையாக கிடைக்கவில்லை

இதனால் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தான் மீண்டும் கர்ப்பமாகி உள்ளதாகவும் எனவே எனக்கு மருத்துவ செலவு அதிகமாக உள்ளது உடனடியாக மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திரா காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார் உடனடியாக அங்கே இருந்த பெண் காவலர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் காவலர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

AI மூலம் நடவடிக்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved