செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதிக்கு திமுக, அதிமுக ஆகிய இருகட்சியினர் மத்தியிலும் மவுசு கூடியிருக்கும் நிலையில், எந்த கட்சியில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதை அலசி ஆராய்கிறது இந்த செய்தித் தொகுப்பு. * செங்கல்பட்டு தொகுதியில் உள்ள முக்கியமான தொகுதி மதுராந்தகம்* ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இருதரப்பிலும் காத்திருப்பு* தனித் தொகுதியான மதுராந்தகத்தின் எம்.எல்.ஏ. மரகதம்தமிழ்நாடு தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டிருக்கும் வேளையில், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களுக்கான ரேசில் இருப்பவர்கள் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பணிகளில் பம்பரமாக சுழன்று வருவதால் களம் அனல் பறக்க மாறியிருக்கிறது. செங்கல்பட்டு தொகுதியில் உள்ள மதுராந்தகம் தொகுதி தான் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இருதரப்பிலும் குறிவைக்கப்பட்டு கட்சியினர் சீட் கேட்டு கோதாவில் குதித்துள்ளனர். தனித் தொகுதியான இதில், முன்னாள் எம்.பி.யான மரகதம் குமரவேல் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவில் மாநில அளவில் வளர்ந்து வரும் முகமாக இருக்க கூடிய மரகதம் குமரவேலுக்கு சொந்த தொகுதி திருப்போரூராக இருந்தாலும், தேர்தலில் வெற்றியை தேடித் தந்த மக்களிடம் ஓரளவு நல்ல பெயரையே சம்பாதித்து வைத்திருப்பதாக கூறிக்கொள்கின்றனர் எம்.ஜி.ஆர் மாளிகை அனுதாபிகள்.* அதிமுகவில் மாநில அளவில் வளர்ந்து வரும் முகமாக உள்ள மரகதம்* முன்னாள் எம்.எல்.ஏ. கணிதா சம்பத்தும் சீட் கேட்டு முகாம் என்னதான் மரகதம் குமரவேலுக்கு சீட் கிடைப்பது உறுதியானாலும், முன்னாள் எம்.எல்.ஏ ஆன கணிதா சம்பத்தும் சீட் கேட்டு குஸ்தி பாய்வதாக நொந்து கொள்கின்றனர் மதுராந்தகத்தின் ரத்தத்தின் ரத்தங்கள். கடந்த முறை செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியதால் இம்முறை தனக்கு ஏற்கனவே வெற்றிக்கனியை பறித்து தந்த மதுராந்தகத்திற்கே திரும்பிவிடலாம் என்ற எண்ணத்தில் பூர்வாங்க பணிகளை சைலண்டாக தொடங்கி இருக்கின்றாராம். இதில் வருத்தம் என்னவென்றால் இருவருமே தொகுதிக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் என்பது தான். ஒருவேளை அதிமுகவில் சீட் பிரிப்பதில் களேபரம் ஏற்பட்டால் பாஜக அதனை டேக் செய்து, மாவட்ட தலைவர் பிரவீன் குமாருக்கு வாய்ப்பு தர யோசித்து வருகிறதாம்.* கடந்த முறை செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி தழுவிய கணிதா* ஏற்கனவே வெற்றிக்கனியை பறித்து தந்த மதுராந்தகத்திற்கு வர முடிவு* இருவருமே தொகுதிக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் என்பது தான் அதிர்ச்சிஇதுஒருபுறமிருக்க, தேமுதிக வருகைக்கு பிறகு வடமாவட்டங்களில் திமுக கூட்டணிக்கு பூஸ்ட் குடித்ததை போல் ஒரு உற்சாகம் பிறந்திருப்பதாக சிலாகித்து பேசுகின்றனர் உள்ளூர் உடன்பிறப்புகள். மதுராந்தகத்தில் இதுவரை அதிமுக, திமுக என மாறி மாறியே வெற்றி பெற்று வருவதால் இம்முறை தொகுதி திமுகவுக்கு நிச்சயம் என பம்பரம் போல் சுற்றுச் சுழன்று களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனராம். செய்யூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு, கே.என்.நேரு மூலம் அறிவாலய கதவை தட்டிக் கொண்டிருக்க, உதயநிதி ஆசியுடன் தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டமைப்பை சேர்ந்த மாநில தலைவர் தியாகராஜன் தலைவரின் சிறப்பு தரிசனத்திற்கு தயாராகி கொண்டிருப்பதாக முணுமுணுக்கப்படுகிறது. இவர்களை தவிர சம்யுக்தா அய்யனார், பொன் சிவகுமாரும் ரேசில் உள்ளனர்.* அதிமுகவில் சீட் பிரிப்பதில் களேபரம் ஏற்பட்டால் பாஜகவுக்கு வாய்ப்பு* செய்யூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு திமுகவில் போட்டியிட வாய்ப்பு* உதயநிதி ஆசியுடன் தியாகராஜன் சிறப்பு கோட்டாவில் வாய்ப்பு பெற முயற்சிதிராவிட கட்சிகள் மதுராந்தகத்தை இறுக்கி பிடித்திருக்கும் நிலையில், 2006 ஆம் ஆண்டு தேர்தலை போல் நாம் ஏன் மதுராந்தகத்தை கேட்டுப் பெறக்கூடாது என காங்கிரஸ் ஆழ்ந்த யோசனையில் இறங்கியுள்ளதாம். ஒருவேளை சீட் கிடைக்கும் பட்சத்தில் முன்னாள் காஞ்சிபுரம் எம்.பி. விஸ்வநாதனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. அரசியல் குழந்தையான தவெக களப்பணியில் சுணக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.* நாம் ஏன் மதுராந்தகத்தை கேட்டுப் பெறக்கூடாது? காங். யோசனை* அரசியல் குழந்தையான தவெக களப்பணியில் சுணக்கம் அச்சரப்பாக்கத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும், எல்.எண்டத்தூர் பகுதியில் காவல்நிலையம், துணை மின் நிலையம் அமைக்க வேண்டும், சுற்றுலாதலமான வேடந்தாங்களில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இன்னும் கிடப்பிலேயே இருப்பதால் இதனை நிறைவேற்றி தருபவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. Related Link கத்தியின்றி ரத்தமின்றி 4 முனை யுத்தம்