news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரண்டு பிரிவுகளாக நிற்கும் பாமக
tv

Also Watch

tv

Read this

இரண்டு பிரிவுகளாக நிற்கும் பாமக

நெய்வேலி வாக்காளப் பெருமக்களே.. தேர்தல் 2026

29

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்ட பாமக வேட்பாளர், இம்முறை ராமதாஸ் முகாமில் ஐக்கியமாகி விட்டதால், தொகுதியை கைமாற்ற அதிமுக யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. நெய்வேலியின் நிலவரம் என்ன? யாருக்கு சீட் கிடைக்கும்? உள்ளிட்டவற்றை அலசி ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு.
அனல்பறக்கும் தமிழ்நாடு அரசியல் களத்தில், நாளொரு பரபரப்பும் பொழுதொரு அதிரடிகளும் அரங்கேறி வரும் சூழலில், தொகுதி வாரியான களேபரங்களும் பரபரக்க தொடங்கி விட்டன. அப்படித்தான் கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி, இருபெரும் திராவிட கட்சிகளுக்கான நேரடி போட்டியாக அமையுமா? அல்லது கூட்டணி கட்சிகளிடம் தள்ளிவிடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவை சேர்ந்த சபா ராஜேந்திரன், கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடி பணியாற்றி வரும் நிலையில், இந்த முறை யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.



* நெய்வேலி தொகுதி திமுக-அதிமுகவுக்கு நேரடி போட்டியா?
* கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிடப்படுமா?


திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கடந்த முறை பண்ருட்டி தொகுதியில் களம் கண்டு வெற்றிபெற்ற நிலையில், அங்கு நிலவும் அதிருப்தி காரணமாக இம்முறை நெய்வேலி தொகுதியை கேட்டு, மன்றாடி கொண்டிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், திமுகவோ வீணாக விஷப்பரீட்சை செய்ய விருப்பமில்லாமல், கடந்த முறை போலவே சபா ராஜேந்திரனையே முன்னிறுத்த திட்டமிட்டிருப்பதாக கூறுகின்றனர். ஆனால், சென்ற தேர்தலிலேயே நூலிழையில் வெற்றி பெற்ற ராஜேந்திரன் இந்த முறை தொகுதியை தக்க வைப்பது சந்தேகமே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். என்.எல்.சி. விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்காதது, தொகுதி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தாதது உள்ளிட்டவை அவருக்கு பின்னடைவாக உள்ளது. குறிப்பாக தொகுதியின் உயிர்நாடி தொழிலாக உள்ள முந்திரி, பலா விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் அதிருப்தி நிலவுவதாக சொல்லப்படுகிறது.

* த.வா.க. வேல்முருகன் கடந்த முறை பண்ருட்டி தொகுதியில் வெற்றி
* நெய்வேலி தொகுதியை வேல்முருகன் கேட்பதாக தகவல்


ஆளும் கட்சியில் நிலைமை இப்படி இருக்க, எதிர்க்கட்சியான அதிமுகவில் மாவட்ட செயலாளரான சொரத்தூர் ராஜேந்திரன் சொந்த தொகுதியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். கடந்த முறை பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதால் வேறு வழியில்லாததால் பண்ருட்டிக்கு தாவி, தோல்வியை பரிசாக பெற்றதால் இந்த முறை என்ன ஆனாலும் சரி, நெய்வேலியில் தான் போட்டியிடுவேன் என ஒற்றைக்காலில் நிற்பதாக, எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதியில் பூர்வாங்க பணிகளை ராஜேந்திரன் தொடங்கிவிட்ட நிலையில், கூட்டணி கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. ஏனென்றால் வன்னியர்கள் அதிகமுள்ள இத்தொகுதியை கேட்டுப் பெற பாமக முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

* அதிமுகவில் மாவட்ட செயலாளரான சொரத்தூர் ராஜேந்திரன்
* நெய்வேலியில் தான் போட்டி - சொரத்தூர் ராஜேந்திரன் உறுதி


ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதலால், பாமக சார்பில் நிற்பதற்கு நிர்வாகிகள் தயங்குவதாக சொல்லப்படுகிறது. கடந்த முறை பாமக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிட்ட ஜெகன் என்பவர், இப்போது ராமதாஸ் முகாமில் ஐக்கியமானதால், அவருமே இந்த தொகுதியில் போட்டியிடப்போவதாக கூறிக் கொள்கின்றனர். ஒருவேளை ராமதாஸ் தரப்பில் ஜெகன் போட்டியிட்டால், அவரை எதிர்த்து அன்புமணி தரப்பு போட்டியிட விரும்புவதாகவும் தெரிகிறது. பாமக வாக்குகள் சிதறினாலும், என்.எல்.சி.க்கு எதிரான அன்புமணி தரப்பின் தொடர் போராட்டம் அவருக்கு கை கொடுக்கும் என கள நிலவரம் கூறுகின்றது.

* ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதலால் பாமக தயக்கம்
* அன்புமணியின் போராட்டம் அவருக்கு கை கொடுக்கும் என தகவல்
* தத்தளிக்கும் தவெக, நாம் தமிழர்


தவெக சார்பில் வேட்பாளர் இவர் தான் என்று சொல்லுமளவுக்கு கூட நிர்வாகிகள் யாரும் இல்லாததால், அக்கட்சி களத்திலேயே இல்லை என்று தான் அப்பகுதியினர் கூறுகின்றனர். இதேபோல் நாதக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னும் அவர் யாரென்ற விவரமே மக்களுக்கு தெரியவில்லையாம். மொத்தத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த ஒரே பெயரை கொண்ட இருவருக்கும் இடையேயான ஒரு போட்டியாகத் தான் நெய்வேலி தொகுதி தேர்தல் போட்டி இருக்கும் என்பதே பெரும்பாலானோரின் கணிப்பாக இருக்கிறது.

Related Link
ராமநாதபுரம் சீமை யாருக்கு?

ராமநாதபுரம் சீமை யாருக்கு?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மீனம் ராசி தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2026

5
2 hrs 19 mins agoshare
மீனம் ராசி தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved