news-tamil-logo

3/19/2026, 8:57:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மனைவியை கிண்டல் செய்த நபர்கள்.. தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த கொடூரம்
tv

Also Watch

tv

Read this

மனைவியை கிண்டல் செய்த நபர்கள்.. தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த கொடூரம்

கணவனுக்கு நேர்ந்த கொடூரம்

Posted on: Mar 27, 2025 02:56 PM

40

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
52

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, மனைவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கணவனை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பட்டத்திபாளையம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் குடிநீர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவியை அதே ஊரைச்சேர்ந்த சிவக்குமார் மற்றும் சேமலை ஆகியோர் ஆபாசமாக பேசி கிண்டல் செய்தாக கூறப்படுகிறது.

இதனை தட்டிக்கேட்ட கணவர் சக்திவேலிடம் இருவரும் வாக்குவாதம் செய்து அவரை தாக்கியதில்,

நிலைதடுமாறி அருகில் இருந்த சுவற்றில் மோதியதில் காயமடைந்த சக்திவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் சிவக்குமார் மற்றும் சேமலை ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
2 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved