செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார், இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வல்லம் பகுதியை சேர்ந்த 22 வயதான அருண், தனது அண்ணன் தியாகராஜன் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு போலீசார் சோதனை நடத்தினர்.