news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் அமைந்துள்ள இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு
tv

Also Watch

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் அமைந்துள்ள இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு

கரூர்

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
karur 1

குளித்தலை அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் அமைந்துள்ள இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கடவூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம்,குளித்தலை அருகே தரகம்பட்டியில் வீரம்மாள் செம்பாகி கோவில் அமைந்துள்ளது.இந்த கோவில் முன்பாக வழிபாடுகள் நடத்த முடியாதவாறு சிலர் கம்பி வேலி அமைத்துள்ளனர் இதனை அறிந்த குடிப்பாட்டு பக்தர்கள் கோவிலை ஆய்வு செய்துள்ளனர்.இதில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் அமைந்துள்ள இடத்தில் தனி நபர் ஒருவர் கடந்த 11/8/2025 அன்று பத்திரப்பதிவு செய்து பட்டாவும் மாற்றியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் வீரம்மாள் செம்பாக்கி கோவில் முன்பாக வழிபாடுகள் நடத்த முடியாதவாறு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடவூர் வட்டாட்சியர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்படும் இது வரை நடவடிக்கையும் எடுக்கபட்டவில்லை என கூறப்படுகிறது.இதனையடுத்து கோவில் நிலத்தில் தனி நபர் ஒருவர் பத்திரப்பதிவு செய்து பட்டா மாறுதல் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும் தரகம்பட்டியில் உள்ள கடவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஊர் பொதுமக்கள், முக்கியஸ்தர்கள், குடிபாட்டு பக்தர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாலச்சந்திரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 20082026

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved