Also Watch
Read this
Posted on: May 03, 2025 04:00 AM
By: Srini Vasan

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தவெக தலைவரும், நடிகருமான விஜயின் காரை திடீரென ரசிகர்களும், தொண்டர்களும் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாண்டிக்குடி கிராமத்தில் விஜயின் ஜனநாயகன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
எனவே, விஜயை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் தவெக தொண்டர்களும், ரசிகர்களும் குவிந்தனர்.
ஆனால், படப்பிடிப்புக் குழுவினர் யாரையும் அனுமதிக்காததால் ஏமாற்றமடைந்த அவர்கள், மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
மழை நின்றதும் விடுதிக்கு புறப்பட்ட விஜயின் காரை, ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved