news-tamil-logo

3/19/2026, 9:14:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளி மாணவிகளான அக்கா, தங்கைக்கு பாலியல் வன்கொடுமை... கூலித் தொழிலாளிகள் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
tv

Also Watch

tv

Read this

பள்ளி மாணவிகளான அக்கா, தங்கைக்கு பாலியல் வன்கொடுமை... கூலித் தொழிலாளிகள் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

முசிறி, திருச்சி

Posted on: Apr 19, 2025 01:54 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கூலித் தொழிலாளிகள் இருவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

முசிறி அருகே அரசு பள்ளியில் 9 மற்றும் 7ஆம் வகுப்பு படிக்கும் அக்கா-தங்கை மயங்கிய நிலையில், அவர்களை மீட்டு ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிகளை மருத்துவர்கள் சோதனை செய்ததில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து முசிறி அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் வெல்டிங் பட்டறையில் வேலை பார்க்கும் அஜித் மற்றும் கொத்தனார் வேலை பார்க்கும் கேசவன் ஆகியோர், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக போட்ட முக்கிய கண்டிஷன், ஏற்றாரா கமல்?

2
9 mins agoshare
kamal in dmkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved